உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / போயிங் விமான பரிசோதனைகள் திருப்தி

போயிங் விமான பரிசோதனைகள் திருப்தி

புதுடில்லி: 'போயிங் 737--8 மேக்ஸ்' விமானங்கள் பரிசோதனை, திருப்திகரமாக முடிந்ததாக, டி.ஜி.சி.ஏ., எனும் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.கடந்த 5ம் தேதி, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737--9 மேக்ஸ் விமானம், நடுவானில் சென்ற போது, அதன் அவசரக்காலத்தில் வெளியேறுவதற்கான கதவு திடீரென உடைந்து பறந்தது. இந்த நிகழ்வுக்கு பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான போக்குவரத்து இயக்குனரகம், உள்நாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களின் அவசரக்கால கதவுகளை பரிசோதிக்குமாறு கேட்டுக் கொண்டது.இந்த நிலையில் தற்போது, இவ்வகை விமானங்களுக்கான பரிசோதனைகள் திருப்திகரமாக நிறைவு அடைந்ததாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்