மேலும் செய்திகள்
பஸ் டிரைவர், கண்டக்டரைதாக்கிய மூவர் தலைமறைவு
23-Mar-2025
கோவை:'கொடிசியா' சார்பில், 'பில்டு இன்டெக் - 2025' கண்காட்சி, கோவையில் நாளை துவங்கி, நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கண்காட்சி தலைவர் ஞானவள்ளல் ஆகியோர் கூறியதாவது:நவீன கட்டுமானப் பொருட்கள், சேவைகள், கட்டுமான இயந்திர தொழில்நுட்பங்கள், கட்டுமான முறைகள், கட்டுமான திட்டங்கள் குறித்த தகவல்களை, கண்காட்சியில் அறியலாம்.தமிழகம் மட்டுமின்றி; டில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளம், மஹாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 350க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.நுழைவு கட்டணம் 50 ரூபாய். visitor.codissia.comஎன்ற இணைய தளத்தில், ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருவோர், பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும். 40,000 பார்வையாளர்கள் வருவர் என, எதிர்பார்க்கிறோம். கண்காட்சி துவக்க விழா, நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. சிறப்பு விருந்தினராக, கலெக்டர் பவன்குமார் பங்கேற்கிறார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
23-Mar-2025