உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வாங்குவோர் - விற்போர் சந்திப்பு ஈரோட்டில் ரூ.55 கோடிக்கு வர்த்தகம்

 வாங்குவோர் - விற்போர் சந்திப்பு ஈரோட்டில் ரூ.55 கோடிக்கு வர்த்தகம்

ஈரோடு,:ஈரோட்டில் கடந்த நவ., 14, 15ல் நடந்த வாங்குவோர் - விற்போர் சந்திப்பு வாயிலாக,, 55 கோடி ரூபாய்க்கான வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை, தொழில் வணிகத்துறை, பேட்டியா போன்ற அமைப்புகள் சார்பில், ஈரோட்டில் நவ., 14, 15ல் 'வாங்குவோர் - விற்போர் சந்திப்பு' நடந்தது. இதில், 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், 55 கோடி ரூபாய்க்கான வர்த்தக பதிவு நடந்தது. இதில், 18 கோடி ரூபாய் வரை அமெரிக்க டாலர் வடிவில் கிடைத்துள்ளது. இதில் உணவு, ஜவுளி, தோல் தொழில், தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில்களுக்கு வரவேற்பு இருந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் பல நுாறு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சென்னையில் இதுபோன்ற சந்திப்பு நடக்கும்போது அரசும், வர்த்தக சங்கங்களும் மிகப்பெரிய அளவில் பொருட்செலவு செய்வர். ஈரோட்டில் நடந்த சந்திப்புக்கு, 2.50 கோடி ரூபாய் அரசு தரப்பில் செலவு செய்து, 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள், எங்களை போன்ற அமைப்பினர் தொடர்பு வாயிலாக, இரண்டாம் கட்ட நகரங்களிலும் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நல்ல பலன் தரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த சந்திப்பு, சென்னையில் ஜன., 12ல் நடக்க உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி