உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 5 நிமிட சார்ஜில், 400 கி.மீ., சீனாவின் பி.ஒய்.டி., பேட்டரி

5 நிமிட சார்ஜில், 400 கி.மீ., சீனாவின் பி.ஒய்.டி., பேட்டரி

-பீஜிங்:பொதுவாக மின்சார கார்களில், பேட்டரி சார்ஜிங் நேரம் குறைபாடாக பார்க்கப்படுகிறது.அதை நிவர்த்தி செய்ய சீனாவின் 'பி.ஒய்.டி.,' மின்சார கார் நிறுவனம், 5 நிமிட சார்ஜில், 400 கி.மீ., ரேஞ்ச் வழங்கும் அதிவேக பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.இந்நிறுவனம், 'சூப்பர் இ - பிளாட்பார்ம்' என்ற மின்சார கார் கட்டுமான தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த தளத்திற்கேற்ப, பேட்டரி மற்றும் மோட்டார் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுஉள்ளது.அதாவது இந்த பேட்டரியை, 1,000 கி.வாட்., ஆற்றல் கொண்ட பாஸ்ட் சார்ஜர்களால் சார்ஜ் செய்ய முடியும். 5 நிமிட சார்ஜில் 400 கி.மீ., ரேஞ்ச் வழங்கும் வகையில் பேட்டரியும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிமுகமான, 'டெஸ்லா வி4' சார்ஜர்களை விட, 'பி.ஒய்.டி.,'யின் பாஸ்ட் சார்ஜர்கள் இரு மடங்கு வேகமானவை.இந்த கட்டுமான தளம், 'பி.ஒய்.டி.,'யின் 'ஹான் எல்' மற்றும் 'டாங் எல்' ஆகிய இரு கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.பேட்டரி சார்ஜிங் 90 சதவீதத்துக்கு வந்த போதும், 600 கி.வாட்., ஆற்றலில் சார்ஜ் செய்ய முடிவதாக கூறப்படுகிறது.முதற்கட்டமாக இந்த, 1,000 கி.வாட்., பாஸ்ட் சார்ஜர்களை, சீனாவில் 4,000 இடங்களில் அமைக்க உள்ளதாக பி.ஒய்.டி., நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி