உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தங்கத்தை வாங்கி குவித்த சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து 12வது மாதமாக மும்முரம்

தங்கத்தை வாங்கி குவித்த சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து 12வது மாதமாக மும்முரம்

பீஜிங்: சீன மத்திய வங்கி தொடர்ச்சியாக 12வது மாதமாக, கடந்த அக்டோபரிலும் தங்கத்தின் கையிருப்பை அதிகரித்து வருவது, அவ்வங்கி வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்துள்ளது. சீனாவின் தங்க கையிருப்பு, கடந்த செப்டம்பரில் 7.40 கோடி அவுன்சில் இருந்து, அக்டோபர் இறுதியில் 7.41 கோடி அவுன்ஸாக அதிகரித்து உள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 31 கிராம் தங்கத்துக்கு சமமாகும். முந்தைய ஆண்டின், இதே காலத்தில் தங்கத்தின் கையி ருப்பு 7.28 கோடி அவுன்ஸ் ஆக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில், 1.80 சதவீதம் அதிகரித்து உள்ளது. மதிப்பின் அடிப்படையில், கடந்த செப்டம்பரில் 24.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தங்கம், அக்டோபர் மாத இறுதியில் 26.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டாலருக்கு மேல் விற்பனையாகி வருகிறது. கடந்த அக்டோபரில் வரலாறு காணாத வகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,381 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது. சீன மத்திய வங்கி 18 மாதங்கள் தொடர்ச்சியாக தங்கம் வாங்கியதை கடந்த 2024 மே மாதம் நிறுத்தியது. இருப்பினும், அதே ஆண்டு நவம்பரில் மீண்டும் தங்கம் வாங்குவதை துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ