மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட் ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்
22 hour(s) ago
நுமாலிகார் ரீபைனரிக்கு நவரத்னா அந்தஸ்து
23 hour(s) ago
வர்த்தக துளிகள்
03-Dec-2025
சென்னை : மதுரை வாஞ்சிநகரம், மேலுாரில், 'சிப்காட்' நிறுவனம் அமைக்க உள்ள முதல் தொழில் பூங்காவுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, அங்கு உள்கட்டமைப்பு பணிகள் துவக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தொழில் துவங்க வரும் பெரிய நிறுவனங்கள் ஆலை அமைக்க வசதியாக, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது. மதுரை மாவட்டம் மேலுார் பூதமங்கலம், வாஞ்சிநகரம் கொடுக்கம்பட்டியில், 278 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதுவே, மதுரையில் சிப்காட் நிறுவனத்தின் முதல் தொழில் பூங்கா. இங்கு, 67 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தோல் அல்லாத காலனி, எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங், வாகனம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு, மனைகள் ஒதுக்கப்பட உள்ளன. மதுரை தொழில் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் இந்தாண்டு துவக்கத்தில், சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. தற்போது, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை தொழில் பூங்காவில் சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பூங்கா வாயிலாக, 4,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு, மதுரையில் ஏழு தொழிற்பேட்டைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கிய அம்சங்கள் அமையும் இடம் மதுரை மாவட்டம், மேலுார் பூதமங்கலம் , வாஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி பரப்பளவு 278 ஏக்கர் சிறப்பு மதுரையில் சிப்காட் நிறுவனத்தின் முதல் தொழில் பூங்கா திட்ட மதிப்பு 67 கோடி ரூபாய் தொழில் வாய்ப்புகள் தோல் அல்லாத காலனி, எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங், வாகனம் வேலைவாய்ப்பு 4,000 பேருக்கான வாய்ப்பு
22 hour(s) ago
23 hour(s) ago
03-Dec-2025