உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக வாகன விற்பனை 12 சதவீதம் அதிகரிப்பு

வர்த்தக வாகன விற்பனை 12 சதவீதம் அதிகரிப்பு

சென்னை, செப்டம்பர் மாத வர்த்தக வாகன விற்பனை, ஜி.எஸ்.டி., குறைப்பால், 11.75 சதவீதம் உயர்ந்து, வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், 78,369 வர்த்தக வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பரில் 87,578 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., குறைப்பால், விலை குறைந்த ஒரு வாரத்தில் இந்த உயர்வு சாத்தியமானது. டாடா மற்றும் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் விற்பனை, 15 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டு மெதுவாக துவங்கினாலும், பண்டிகை நாட்கள், ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் ஆகியவை வர்த்தக வாகன தேவையை அதிகரித்துள்ளன. செப்டம்பர் மாதம் எங்களுக்கு, நடப்பாண்டின் சிறந்த மாதமாகும். குறிப்பாக, இலகுரக மற்றும் பிக்கப் டிரக் வாகனங்களின் விற்பனை, 30 சதவீதம் அதிரித்துள்ளன. நாட்டின் கட்டுமான, சுரங்கத் துறை நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில், டிப்பர்கள் மற்றும் லாரிகளுக்கு அதிக தேவை ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். - கிரிஷ் வாஹா, செயல் இயக்குநர், டாடா மோட்டார்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை