மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட் ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்
22 hour(s) ago
நுமாலிகார் ரீபைனரிக்கு நவரத்னா அந்தஸ்து
23 hour(s) ago
ஹைதராபாத்,:இந்தியாவுக்கு ஏற்ற கலப்பின கோதுமையை உருவாக்க இருப்பதாக, 'கொர்டேவா அக்ரி அயன்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் செயல்பாடுகள் பிரிவின் தலைவர் புரூக் கன்னிங்ஹாம் தெரிவித்துள்ளதாவது: கடந்தாண்டு முதலீட்டாளர் தினத்தன்று, கலப்பின கோதுமை உருவாக்கம் குறித்து அறிவித்தோம். தற்போது இந்தியாவுக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, இந்தியா எங்கள் முன்னுரிமையில் உள்ள நாடு ஆகும். பொதுவாக கலப்பின கோதுமை விதையை உருவாக்க 25 ஆண்டுகள் பிடிக்கும். இந்நிலையில், இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ற கலப்பின கோதுமையை உருவாக்கத் தொடங்கிவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். வர்த்தக ரீதியில் கோதுமை இந்தியாவில் புழக்கத்துக்கு வர 10--15 ஆண்டுகள் ஆகும் என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த கொர்டேவா நிறுவனம், கடந்த 1972 முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் இரண்டு பெரிய ஆய்வு மையங்களை நடத்துகிறது. எத்தனாலுக்குக் கிடைத்துவரும் வரவேயற்பை அடுத்து, இந்தியாவில் மக்காச்சோளத் துறையில் இந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.
22 hour(s) ago
23 hour(s) ago