உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பின்டெக் துறையில் முதலீடு நிறுவனங்களுடன் அரசு பேச்சு

பின்டெக் துறையில் முதலீடு நிறுவனங்களுடன் அரசு பேச்சு

சென்னை:தமிழகத்தில், 'பின்டெக்' எனப்படும் நிதி தொழில்நுட்ப துறையில் முதலீட்டை ஈர்க்க, தொழில் துறையினருடன் அமைச்சர் ராஜா ஆலோசனை நடத்தியுள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 110 ஏக்கரில் நிதிநுட்ப நகரம் அமைக்கும் பணியில், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அங்கு, 225 கோடி ரூபாய் செலவில், 'பின்டெக் டவர்' எனப்படும் நிதிநுட்ப கட்டடம், 5.50 லட்சம் சதுர அடியில் அமைக்கப்படுகிறது. நிதிநுட்ப நகரில் உள்ள மனைகளும், கட்டடமும், நிதி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட நிதி சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அங்கு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பாக, சென்னையில் நேற்று முன்தினம் அமைச்சர் ராஜா, தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். தொழில் துறை செயலர் அருண் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இது குறித்து, அமைச்சர் ராஜா விடுத்த அறிக்கையில், 'நிதி, வங்கி, காப்பீடு, உலகளாவிய திறன் மையம் ஆகியவற்றில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் வங்கி, நிதி, காப்பீடு சேவைகளில், 15 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. அவற்றில், 60 சதவீதம் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள்.இதற்கு, தமிழக இளைஞர்களிடம் உள்ள அபரிமிதமான திறமையே காரணம். நிதிநுட்ப கட்டடம், நிதி, வங்கி, காப்பீடு, நிதிநுட்ப கண்டுபிடிப்புக்கு, தமிழகத்தை உலகளாவிய மையமாக மாற்ற உதவும்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை