மருத்துவ காப்பீடு கோரிக்கை அதிகரிப்பு
மருத்துவ காப்பீடு பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மருத்துவ காப்பீடு கோரிக்கையின் அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.இணைய காப்பீடு நிறுவனம் பாலிசிபஜார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ காப்பீடு கிளைம் பெறுவதற்கான கோரிக்கை தொகை அதிகரித்திருப்பதும், இளம் வயதினர் மத்தியில் காப்பீடு கோரிக்கை பெறுவது கணிசமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், காப்பீடு கோரிக்கை அடிக்கடி சமர்ப்பிக்கப்படும் அளவும் அதிகரித்துள்ளது. மருத்துவ காப்பீடு கோரிக்கை சமர்ப்பித்தவர்களில், 18 முதல் 35 வயது பிரிவினர் 38 சதவீதமாகவும், 36 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 30 சதவீதமாகவும் உள்ளனர். இந்த விகிதம், 46 முதல் 60 வயது ஆனவர்கள் பிரிவில் 25 சதவீதமாக உள்ளது. மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கோரிக்கை சமர்ப்பித்துள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மத்தியில் டெர்ம் காப்பீடு பெறுவது அதிகமாக உள்ளது. காய்ச்சல், இதய நோய், வயிறு தொடர்பான நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய்கள் பாதிப்பு பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.