உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக நாடுகளை விட வலிமையாக வளரும் இந்தியா: உலக பொருளாதார அமைப்பு அறிக்கை

உலக நாடுகளை விட வலிமையாக வளரும் இந்தியா: உலக பொருளாதார அமைப்பு அறிக்கை

புதுடில்லி : உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடும் சிக்கலில் இருக்கும் அதேநேரத்தில், இந்தியாவின் நிலை உறுதியாக இருப்பதாக, உலக பொருளாதார அமைப்பான டபிள்யு.இ.எப்., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'தலைமை பொருளாதார நிபுணர்கள் பார்வை' என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா

 தொடர்ந்து 2025, 2026ம் ஆண்டுகளிலும், உலகின் வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா திகழும் தெற்காசிய நாடுகளிலேயே வளர்ச்சிக்கான அதிக சாதகமான குறியீடுகளை பெற்றுள்ளது

அமெரிக்கா

 தற்போதைய அமெரிக்க பொருளாதார கொள்கைகள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை வர்த்தக முடிவுகள், அதிகரிக்கும் மந்தநிலை போன்ற ஆபத்துகளால் அமெரிக்க கொள்கைகள் பாதிக்கும் வட அமெரிக்கா மிக பலவீனமான சூழலை எதிர்கொள்கிறது.

சீனா

 சீன பொருளாதாரம் மந்தநிலையில் நீடிக்கும்; வளர்ச்சி 5 சதவீதத்தை ஒட்டியே இருக்கும் தெற்காசியாவின் வளர்ச்சி வலிமையாக இருக்கும் என, 33 சதவீத பொருளாதார நிபுணர்கள் கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

rameshbabu rengarajan
மே 29, 2025 14:28

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.. இந்தியா முன்னேறினால் ஹிந்துக்கள் மட்டுமல்ல எல்லோர்க்கும் முன்னேறமுமாக இருக்கும்


Raja k
மே 29, 2025 13:59

மோடி அவர்களால் இது சாத்தியமானது, வட இந்திய பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது, ஆனால் இந்த விடியாத திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் இருண்டு கிடக்கிறது, விரைவில் தமிழகத்தில் தாமரை மலர்ந்து, தமிழகத்தை அமெரிக்காவாக மாத்தனும்,


போராளி
மே 29, 2025 16:00

ஆஹாங்


Sugumar
மே 29, 2025 09:33

இப்படி பொய்யா சொல்லிட்டு திறிங்க


R Dhasarathan
மே 29, 2025 06:45

தவறான கருத்து. அறிவியல் சார்ந்த வளர்ச்சி அதிகமாக இருக்கும், ஆனால் வரி விதிப்பது மூலமாக வளர்ச்சி காண்பிப்பது தற்காலிக வளர்ச்சி மட்டுமல்ல, சிறு குறு தொழில் செய்பவர்கள் நலிவடைந்து விடுவார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை