உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ராணுவ சாதனங்களுக்கு பரிசோதனை மையங்கள்: விரைவில் அமைக்க அறிவுறுத்தல்

 ராணுவ சாதனங்களுக்கு பரிசோதனை மையங்கள்: விரைவில் அமைக்க அறிவுறுத்தல்

சென்னை;தமிழகத்தில் அமைக்கப்படும் ஆளில்லா சிறிய விமானம் உள்ளிட்ட ராணுவ சாதனங்களின் தரத்தை பரிசோதிக்கும் மையங்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு, 'டிட்கோ' அதிகாரிகளை, ராணுவ அமைச்சக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி ஓசூரை உள்ளடக்கி ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில், வான்வெளி மற்றும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆளில்லா விமானம், ரேடார் உள்ளிட்ட ராணுவ சாதனங்களின் தரத்தை பரிசோதிக்கும், நான்கு பொது சோதனை மையங்களை, காஞ்சிபுரம், திருச்சியில், 'டிட்கோ' நிறுவனம் அமைக்கிறது. இந்த சோதனை மையங்களின் தற்போதைய நிலை குறித்து, சென்னை, 'டிட்கோ' அலுவலகத்தில், ராணுவ துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், பணிகளை முடித்து, சோதனை மையங்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை