உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ரிலையன்ஸ் ரீடெய்ல் தலைவரானார் ஜெயேந்திரன் வேணுகோபால்

 ரிலையன்ஸ் ரீடெய்ல் தலைவரானார் ஜெயேந்திரன் வேணுகோபால்

புதுடில்லி: 'ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ஜெயேந்திரன் வேணுகோபால் நியமிக்கப்பட்டு உள்ளார். இது, சில்லரை வணிக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்லின் தாய் நிறுவனம். புதிய பொறுப்பில், ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் செயல் இயக்குனர் இஷா அம்பானியுடன் இணைந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, பிளிப்கார்ட் நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்த ஜெயேந்திரன், அந்த பொறுப்பில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகினார். சில்லரை வணிகம், இ - காமர்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டுள்ள இவர், மிந்த்ரா, யாஹூ, அமேசான் வெப் சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் கிண்டி அண்ணா பல்கலையில் இயந்திர பொறியியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ