உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ரூ.172 கோடிக்கு நிலம் விற்ற லீ மெரிடியன்

 ரூ.172 கோடிக்கு நிலம் விற்ற லீ மெரிடியன்

சென்னை: லீ மெரிடியன் ஹோட்டலை நடத்திவரும் அப்பு ஹோட்டல்ஸ், சென்னை கெருகம்பாக்கத்தில் தனக்குள்ள 26 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளது. வி.ஜி.என்., நிறுவனத்திடம் இந்த நிலம் 172 கோடி ரூபாய்க்கு கைமாறியுள்ளது. தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் 420 கோடி ரூபாய் கடன் வழக்கை எதிர்கொண்டுவரும் அப்பு ஹோட்டல்ஸ், தற்போதைய நில விற்பனை வாயிலாக லீ மெரிடியன் ஹோட்டலை 100 கோடி ரூபாயில் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக, அப்பு குழுமத்தின் தலைவரான பழநி பெரியசாமி தெரிவித்துள்ளார். தன் வெள்ளிவிழாவைக் கொண்டாடும் லீ மெரிடியன், மெரியாட் குழுமத்துடன் 20 ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்து செயல்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ