உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிடிக்கப்படும் மீனின் நீளம் நிர்ணயம் இனப்பெருக்கத்தை காக்க நடவடிக்கை மஹாராஷ்டிர அரசு அறிவிப்பு

பிடிக்கப்படும் மீனின் நீளம் நிர்ணயம் இனப்பெருக்கத்தை காக்க நடவடிக்கை மஹாராஷ்டிர அரசு அறிவிப்பு

மும்பை : எந்த நீளத்தில், எந்த மீனை பிடிக்கலாம் என்பதற்கான அளவை மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இனப்பெருக்க பருவத்தை எட்டுவதற்கு முன்பே, சிறிய மீன்களையும் பிடித்து விடுவதால், மீன்கள் இனப்பெருக்கம் குறைந்து வருவதாகவும், மீன்பிடி தொழிலிலும் மீன்கள் வரத்து குறைவதாகவும் மஹாராஷ்டிர அரசு கருதியது. இதையடுத்து, மத்திய கடல்சார் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, மீன்பிடி தொழிலில், பிடிக்கப்படும் மீன்களின் அளவை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட நீளத்துக்கு குறைவான மீன்களை பிடிக்கக் கூடாது; வலைகளில் சிக்கினாலும் அவற்றை பிடித்த இடத்திலேயே விட்டு விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மீன்களை பிடிப்பதற்கான அளவுகளையும் மஹாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு குறைந்த அளவுள்ள மீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. விற்பனைக்காக பிடிக்கப்படும், மீனின் அனுமதிக்கப்பட்ட அளவு (குறைந்தபட்ச நீளம்/செ.மீ.) மீன் ரகம் குறைந்தபட்ச அளவு கூரை கத்தாழை, பன்னா, யூதர் 70 சூரை 50 வஞ்சிரம் 37 கெளுத்தி 29 வங்கவராசி 18 வவ்வால் 14 கானாங்கெளுத்தி, அயலை 14 இறால் 9-11 மத்தி 10 நண்டு 7


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி