உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சந்தை துளிகள்

சந்தை துளிகள்

சரிந்த சந்தை மதிப்பு *இந்த வாரம் சந்தையில் ஏற்பட்ட இறக்கத்தால், இந்தியாவின் அதிக மதிப்புடைய முன்னணி 10 நிறுவனங்களில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தவிர்த்து 9 நிறுவனங்கள், 1.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்து உள்ளன. நிறுவனம் இழப்புரிலையன்ஸ் - 33,084.85 டி.சி.எஸ்., - 36,759.77 எச்.டி.எப்.சி., பேங்க் - 16,7830பார்தி ஏர்டெல் - 7,571.90இன்போசிஸ் - 7,639.93எஸ்.பி.ஐ., - 18,563.19ஐ.டி.சி., - 1,125.68ஹிந்துஸ்தான் யுனிலீவர் - 4,640.44எச்.சி.எல்., டெக் - 4,491.12(*ரூ. கோடியி------------------------------------------------------------இந்தியா சிமென்ட்ஸ் பங்குகள்* ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த, இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளர் உள்ளிட்டோர் வசமிருந்த 3,954 கோடி ரூபாய் மதிப்பிலான 32.72 சதவீத பங்குகளை வாங்கவும், 3,142.35 கோடி ரூபாய் மதிப்பிலான 26 சதவீத பங்குகளை, ஒரு பங்கின் விலை 390 ரூபாய் என நிர்ணயித்து, அதன் பங்குதாரர்களிடம் இருந்து நேரடியாக சந்தையில் வாங்குவதற்கும் ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. ---------------------------------------------------------------------------------அன்னிய செலாவணி கையிருப்பு * நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த டிச.13ம் தேதி முடிந்த வாரத்துடன், 2 பில்லியன் டாலர் குறைந்து, 652.87 பில்லியன் டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. அதாவது, கையிருப்பு ரூபாய் மதிப்பில், 17,000 கோடி ரூபாய் குறைந்து, 55.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவை சமாளிக்க, ரிசர்வ் வங்கி டாலரை அதிகளவில் விற்பதால், கையிருப்பு குறைந்து வருகிறது. முன்னதாக, அன்னிய செலாவணி கையிருப்பில் 700 பில்லியன் டாலரை எட்டி, நான்காவது நாடாக, இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.-----------------------------------------------------------------------------ஹீரோ எலக்ட்ரிக் மோசடிமின்சார வாகன மானியம் பெற்றதில் மோசடி செய்ததாக புகாரின்பேரில், ஹீரோ எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் நிறுவனத்திடம் விசாரணையை தொடர, தீவிர மோசடி தடுப்பு விசாரணை அலுவலகமான எஸ்.எப்.ஐ.ஓ.,க்கு டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மின்சார வாகன தயாரிப்புக்கான மானிய திட்டத்தில் மோசடி நடந்ததாக எஸ்.எப்.ஐ.ஒ., தொடங்கிய விசாரணைக்கு எதிராக, ஹீரோ நிறுவனம் தொடர்ந்த வழக்கில், விசாரணையை நிறுத்த கடந்த 4ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய கனரக தொழில் துறையுடன் பேச்சு நடத்தி, டிசம்பர் 12ம் தேதிக்குள் தீர்வு காண அறிவுறுத்தியது. எனினும், பேச்சில் சமரச தீர்வு ஏற்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையை தொடர டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை