மாருதி கார் ரூ.32,500 வரை உயர்கிறது பிப்.1 முதல் அமலாகிறது
புதுடில்லி,:உள்ளீட்டு பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பால், மாருதி சுசூகி நிறுவனம் அதன் பல்வேறு மாடல் கார்களின் விலையை வரும் பிப்ரவரி 1 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே, இதே காரணங்களுக்காக, 2025, ஜன., 1 முதல் விலையை 4 சதவீதம் வரை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது, மாருதி. இதன்படி, குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 32,500 ரூபாய் வரை கார்களின் விலை உயர்கிறது.
கார் மாடல் உயர்வு (ரூபாயில்)
செலிரியோ 32,500இன்விக்டோ 30,000வேகன் ஆர் 15,000ஸ்விப்ட் 5,000பிரஸ்ஸா 20,000கிராண்ட் விதாரா 25,000ஆல்டோ கே10 19,500எஸ்- பிரஸ்ஸோ 5,000பலினோ 9,000ஃப்ரோனெக்ஸ் 5,500டிசையர் 10,000எர்டிகா 15,000எக்கோ 12,000சூப்பர் கேரி 10,000இக்னிஸ் 6,000சியாஸ் 1,500ஜிம்னி 1,500எக்ஸ்.எல் 6 10,000