உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மெகா உணவு பூங்கா 3 மாநிலங்கள் முன்னிலை

மெகா உணவு பூங்கா 3 மாநிலங்கள் முன்னிலை

புதுடில்லி:'பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா' திட்டத்தின் கீழ், 'மெகா உணவு பூங்கா' திட்டங்களை செயல்படுத்துவதில் ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமைச்சகம் சார்பில் இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்திருப்பதாவது:உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் பண்ணை விளைபொருளுக்கும், சந்தை தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்த 'மெகா புட்பார்க்' எனப்படும் மெகா உணவு பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தை ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், தலா மூன்று என்ற எண்ணிக்கையில் செயல்படுத்தியுள்ளன. இது உணவு பதப்படுத்தும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அம்மாநிலங்களின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை