உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ரயிலில் சிமென்ட் அனுப்ப ஒரு டன்னுக்கு 90 பைசா: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

 ரயிலில் சிமென்ட் அனுப்ப ஒரு டன்னுக்கு 90 பைசா: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடில்லி:டன்னுக்கு 90 பைசா கட்டணத்தில் சிமென்ட்டை கொண்டு செல்ல, ரயில்வே நிர்வாகம் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. சிமென்ட் மூட்டைகளை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு கொண்டு செல்ல புதிய கொள்கையை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பெரிய அளவில் சிமென்ட் தொழிற்சாலை துவங்கி நுகர்வோரிடம் கொண்டு செல்ல, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பிரத்யேக வேகன்கள் பயன்படுத்தப்படும். சிமென்ட் போக்குவரத்தை ஊக்குவிக்க சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டன் சிமென்ட்டை ரயிலில் கொண்டு செல்ல கிலோ மீட்டருக்கு 90 பைசா வீதம் கட்டணம் பெறப்படும். மேலும், நாடெங்கும் சிமென்ட் முனையங்களும் இக்கொள்கையின்கீழ் உருவாக்கப்படும். இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நடுத்தர மக்களை மனதில் கொண்டு இப்புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து செலவு 30 சதவீதம் குறைந்துவிடும். கட்டுமானப் பொருட்களின் விலையும் குறையும். முன்பு படிநிலை அடிப்படையில் சரக்கு போக்குவரத்து கட்டணம் இருந்தது. 200 கி.மீ.,க்கு ஒரு கட்டணம் 210 கி.மீ.,க்கு ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்படும் கொள்கையால், சிமென்ட் தொழிற்சாலை எவ்வளவு துாரம் இருந்தாலும் பிரச்னை இல்லை. இனி சரக்கு போக்குவரத்து கட்டணம் ஒரே மாதிரியானதாகவும், ஏற்றத்தாழ்வு இல்லாததாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி