உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கோவையில் டிசம்பர் 4 முதல் பாதுகாப்பு தளவாட கண்காட்சி: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு அழைப்பு

 கோவையில் டிசம்பர் 4 முதல் பாதுகாப்பு தளவாட கண்காட்சி: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு அழைப்பு

கோவை: பாதுகாப்பு தளவாட உற்பத்தி கண்காட்சி, கோவையில் வரும் டிச., 4ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுதொடர்பாக, தென்னிந்திய பாதுகாப்பு தளவாட உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சங்கம் (சிடா) இயக்குநர் பழனிகுமார், ஆலோசகர் முன்னாள் மேஜர் மதன்குமார் ஆகியோர் கூறியதாவது: பாதுகாப்பு தளவாட உபகரண உற்பத்தியாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில், 'சிடா' செயல்படுகிறது. வரும் 2032ல் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி 3 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கோவையின் பங்களிப்பு 75,000 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை, கோவை மற்றும் சுற்றுப்பகுதி எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வரும் டிச., 4ம் தேதி முதல், கோவை, ரத்தினம் கிராண்ட் ஹாலில், பாதுகாப்பு தளவாட உற்பத்தி கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிடலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை