அனைத்து வர்த்தக தரவுகளை அறிய புதிய தளம் துவக்கம்
புதுடில்லி: மத்திய அரசின் புதிய வர்த்தக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு தளம், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், ஸ்டார்ட் - அப், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு புதிய பார்வையை அளிக்கும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். மத்திய வர்த்தக அமைச்சகம், உருவாக்கி உள்ள புதிய வர்த்தக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு தளத்தை துவங்கி வைத்த பியுஷ் கோயல் கூறியதாவது: புதிய போர்ட்டலான https://www.dgft.gov.in/CP/?opt=trade-statistics வா யிலாக இந்தியா அமல்படுத்தி உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள ஏற்றுமதியாளர்களுக்கு உதவும். இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளை அடையாளம் காண்பதோடு, தயாரிப்பு வரை பகுப்பாய்வு செய்து, தங்கள் போட்டித்திறனை வளர்த்து கொள்ளலாம். பல்வேறு உலகளாவிய நாடுகளின் வர்த்தகம் தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து, பொருளாதார அளவீடுகளுடன் ஒப்பிட்டு, 270க்கும் மேற்பட்ட முறையில் பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். தயாரிப்புத் துறையில் செயல்படுத்தப்படும் பி.எல்.ஐ., அரிய வகை தாதுக்கள் தொடர்பான திட்டங்களின் முக்கிய தரவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.