ரூ.940 கோடி முதலீடு திரட்டிய நியூபெர்க் டயக்னாஸ்டிக்
சென்னை:சென்னையை சேர்ந்த நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம், சுகாதார துறையில் வளர்ந்து வரும் மிகப்பெரிய நோயறிதல் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்துக்கு, 250 நகரங்களில், 10,000க்கும் மேற்பட்ட மையங்கள், 250க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளன. இதன் வாயிலாக, 5,000 வகைக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செய்யும் திறன் உடையது. நியூபெர்க், கோட்டக் ஆல்ட் நிறுவனத்திடம் இருந்து, 940 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டிஉள்ளது. இதுகுறித்து, நியூபெர்க் டயக்னாஸ்டிக்சின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் ஜி.எஸ்.கே. வேலு கூறியதாவது:எங்கள் நிறுவனம், கோட்டக் ஆல்ட் நிறுவனத்தில் இருந்து முதலீட்டை பெற்றுள்ளது. இந்த நிதி, எங்கள் நிறுவனத்தின் பல துறைகளில் திறன்களை மேம்படுத்தவும், நாடு முழுதும் நிறுவனத்தை விரிவுபடுத்தவும் உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.