உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / காகித அட்டை இறக்குமதி: விலை நிர்ணயம்

காகித அட்டை இறக்குமதி: விலை நிர்ணயம்

புதுடில்லி:மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படும் குறிப்பிட்ட வகை காகித மற்றும் காகித அட்டை தயாரிப்புகளுக்கு, குறைந்தபட்ச இறக்குமதி விலையை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், இந்தோனேஷியாவில் இருந்து அதிகளவில் மரக்கூழ் காகித மற்றும் காகித அட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாவதாக இந்திய காகித தயாரிப்பாளர்கள் சங்கம், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் முறையிட்டது. இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், இறக்குமதி செய்யப்படும் இந்த வகை காகித மற்றும் காகித அட்டை தயாரிப்புகளுக்கு, மெட்ரிக் டன் ஒன்றுக்கு 67,220 ரூபாய் குறைந்தபட்ச இறக்குமதி விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்; வரும் 2026, மார்ச் 31 வரை இது அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை