3 மாதங்களில் உயராத பருப்பு விலை
புதுடில்லி:அரசின் நடவடிக்கையால், கடந்த மூன்று மாதங்களில் துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்பு ரகங்களின் சில்லரை விலை, ஏற்றமின்றி நிலையாக உள்ளதாக, உணவு மற்றும் பொது வினியோகங்கள் துறை அமைச்சர் பி.எல்.வர்மா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து லோக்சபாவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லரை விலை உயராமல் பராமரிப்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்க, மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களுடன் மத்திய உணவுத்துறை அமைச்சகம் அவ்வப்போது சந்திப்பு நடத்தி வருகிறது. இதன் வாயிலாக, கடந்த மூன்று மாதங்களில் துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் சில்லைரை விலை ஏற்றமின்றி நிலையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.