வீடுகளின் விலை 6% உயரும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கணிப்பு
புதுடில்லி: இந்தியாவில் வீடுகளின் விலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சராசரியாக ஆறு சதவீதம் அதிகரிக்கும் என, ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தற்போது வீட்டு சந்தை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆடம்பர வீடுகளுக்கான மோகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்து விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த 15 நிபுணர்களிடம், இந்திய ரியல் எஸ்டேட் சந்தை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முக்கிய அம்சங்கள்: இந்தியாவில் வீடுகளின் விலை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சராசரியாக ஆறு சதவீதம் உயரும் நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை எண்ணிக்கை, கடந்த ஜூலை - செப்., காலாண்டில் 9 சதவீதம் குறைந்துள்ளது கட்டுமான நிறுவனங்களின் வருவாய் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆடம்பர வீடுகள் அதிகம் விற்கப்பட்டதே இதற்கு காரணம் ஆடம்பர வீடுகளின் விற்பனை வளர்ச்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் குறைந்துவிடும் பங்குச்சந்தை லாபம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் காரணமாக இன்னும் ஓர் ஆண்டுக்கு இந்த வளர்ச்சி நீடிக்கலாம். நிலத்தின் விலை உயர்வால் இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட ஒரு கோடி மலிவு விலை வீடுகளுக்கு பற்றாக்குறை உள்ளது வரும் 2030க்குள் இந்த பற்றாக்குறை மூன்று மடங்காக அதிகரிக்கும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, வீடு வாங்குவோருக்கு சிறிய அளவில் உதவலாம். இதற்கு மேல் வட்டியை குறைக்க வாய்ப்பில்லை. நகரம் எதிர்பார்க்கப்படும் விலை உயர்வு (%) டில்லி என்.சி.ஆர்., 8 பெங்களூரு 7 மும்பை 5