உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

 பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

புதுடில்லி: குறிப்பிட்ட பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள், வரும் 2026, ஏப்.30ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாட்டினம் நகைகள் இறக்குமதி, உடனடியாக சுதந்திர பிரிவில் இருந்து, கட்டுப்பாடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஏப்.30., வரை இது அமலில் இருக்கும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளி யிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதன்படி , இனி பிளாட்டினம் இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் உரிமம் பெறுவது அவசியம். வெளிநாடுகளில் இருந்து 90 சதவீதம் தங்கமும் மற்றும் சிறிய விகிதத்தில் வெள்ளி, பிளாட்டினம் கலந்திருந்தாலும், அவை பிளாட்டினம் நகைகளாக கருதப்படும். பிளாட்டினம் நகைகளுக்கான இறக்குமதி தொடர்பான தளர்வுகளில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி சிலர் தங்கத்தை இறக்குமதி செய்வதை தடுக்குமாறு, நகை வியாபாரிகள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த செப்டம்பரில் ஆசியான் கூட்டமைப்பு நாடுகளுடான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி, தாய்லாந்து வழியாக அதிகளவில் வெள்ளி நகைகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை