உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இரட்டை இலக்கத்தில் வீழ்ச்சி கண்ட 176 சிறு நிறுவனங்களின் பங்கு விலை

இரட்டை இலக்கத்தில் வீழ்ச்சி கண்ட 176 சிறு நிறுவனங்களின் பங்கு விலை

மும்பை:கடந்த வாரம் 176 சிறு நிறுவனங்களின் பங்குகள், இரட்டை இலக்கத்தில் சரிவை கண்டதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் மிதமாகவே இருக்கும் என்ற கணிப்புகள் இதற்கு காரணமாகின.ஸ்மால்கேப் குறியீட்டில், வெறும் 4 சிறு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் லாபத்தை வழங்கியுள்ளன. ஸ்பந்தனா பூர்த்தி பைனான்சியல் 9 சதவீதம் உயர்வு கண்டது. இது தவிர, பி.டி.சி., இண்டஸ்ட்ரீஸ், காபி டே என்டர்பிரைசஸ், விஜயா டயக்னாஸ்டிக்ஸ், போகர்னா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன. மாறாக, ஜெய் கார்ப், கே.இ.சி., இன்டர்நேஷனல், ஐநாக்ஸ் விண்ட், ஸ்கிப்பர், ஓரியண்டல் ரயில் இன்ப்ராஸ்ட்ரெக்சர் உள்ளிட்ட 176 நிறுவனங்களின் பங்குகள் இரட்டை இலக்க சரிவை சந்தித்தன.மிட்கேப் குறியீட்டில், எந்தவொரு நிறுவனத்தின் பங்கும் இரட்டை இலக்க வளர்ச்சியை காணவில்லை. இப்பிரிவில், பீனிக்ஸ் மில்ஸ் 5.5 சதவீதமும்; யு.பி.எல்., 3.5 சதவீதமும்; யுனோ மிண்டா 3.2 சதவீதமும் உயர்வு கண்டுள்ளன. 18 நிறுவனங்களின் பங்குகள், இரட்டை இலக்கத்தில் இறக்கத்தை கண்டன. அதிகபட்சமாக, கல்யாண் ஜூவல்லர்ஸ் 20 சதவீதம் சரிவை கண்டுள்ளது.சென்செக்ஸ் குறியீட்டை பொறுத்தவரை, டாடா கன்ஸ்யூமர் 4 சதவீதமும்; எச்.சி.எல்., டெக் 2.5 சதவீதமும்; எச்.யு.எல்., 1.5 சதவீதம் லாபத்தை அளித்து உள்ளன. 30 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் மட்டுமே ஏற்றத்தை கண்டன. மீதமுள்ள 22 நிறுவனங்களும் வீழ்ச்சி கண்டுள்ளன. அமெரிக்க கடன் பத்திர வட்டி அதிகரிப்பு, டாலர் மதிப்பு வலுவடைந்ததால், அன்னிய முதலீட்டாளர்கள் 17,000 கோடி ரூபாய் பங்குகளை விற்றனர்வரும் வாரம், முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், மேக்ரோ தரவுகள், சில்லரை பணவீக்க தரவு ஆகியவை சந்தைப் போக்கை தீர்மானிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி