உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முன்பேர வர்த்தகம் சன் டிவி விலக்கி வைப்பு

முன்பேர வர்த்தகம் சன் டிவி விலக்கி வைப்பு

மும்பை:எப் அண்டு ஓ., எனப்படும் முன்பேர பங்கு வர்த்தகத்தில் இருந்து, சன் டிவி நெட்வொர்க் உட்பட 16 நிறுவனங்களை, தேசிய பங்குச் சந்தை விலக்கி வைப்பதாக அறிவித்துள்ளது. இது, வரும் பிப்ரவரி 28ம் தேதி நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் குறிப்பிட்ட காலத்திலான மறுஆய்வு அடிப்படையில், சந்தையின் ஒருமைப்பாடு மற்றும் விதிமுறைகளின் தரம் கடைப்பிடிப்பு ஆகியவற்றை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மருத்துவம், பொழுதுபோக்கு, நிதி, வங்கி, ரசாயனம், மின்சக்தி, தொலைதொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16 நிறுவனங்களின் பங்குகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்நடவடிக்கையால், இந்த நிறுவனங்களின் பங்குகள் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவது தடைபடும் என்பதால், முதலீட்டாளர்களின் கவனம் மற்ற தகுதி வாய்ந்த பங்குகள் மீது திரும்ப வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை