| ADDED : டிச 05, 2025 02:17 AM
சென்னை, நாட்டில் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் செயற்கைக்கோள், ராக்கெட் உருவாக்கம், அவற்றின் பாகங்கள் உற்பத்தி, எரிபொருள் போன்றவற்றை உள்ளடக்கிய விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, விண்வெளி தொழில்நுட்ப நிதியாக தமிழக அரசு, 10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் கீழ், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு தலா, 50 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்பட உள்ளது. நிதியுதவி தேவைப்படும் நிறுவனங்கள், 'www.startuptn.in' இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம். அரசின் நிதியுதவி கிடைப்பதற்கு முன், பிற மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் தொழிலை, தமிழகத்திற்கு மாற்றம் செய்திருக்க வேண்டும். விண்வெளி ஸ்டார்ட்அப் துவக்க, 'www.startuptn.in'ல் விண்ணப்பித்து அரசு நிதி உதவி பெறலாம்