உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / போக்ஸ்வேகனுக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸ்

போக்ஸ்வேகனுக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸ்

புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ததில், 11,760 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, 'போக்ஸ்வேகன்' நிறுவனத்துக்கு, மஹாராஷ்டிரா சுங்க வரி ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிறுவனம், வரியை குறைவாக கட்டும் வகையில், முழு காராக இறக்குமதி செய்யாமல், காருக்கு தேவையான அத்தனை பாகங்களையும், உதிரி பாகங்களாக இறக்குமதி செய்துள்ளது. இந்த வகையில், 30 - 35 சதவீதம் வரி செலுத்துவதற்கு பதிலாக, உதிரிபாகங்களாக குறிப்பிட்டு, 5 - 15 சதவீதம் மட்டுமே வரி செலுத்தி உள்ளது. இதனால், அரசுக்கு கிட்டத்தட்ட 11,760 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என, குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 01, 2024 08:36

உள்ளூர் கம்பெனிக்காரன், வெளிநாட்டுக்காரன் எல்லோரும் இந்தியாவுல ஃப்ராடு, பித்தலாட்டம் செஞ்சுதான் பொழைக்கிறாங்க. நேத்திக்கி இன்போசிஸ்க்கு 283 கோடி அபராதம் போட்டாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை