உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

66,000 கோடி ரூபாயை பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத்தொகை வருவாயாக மத்திய அரசு பெற்றுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டு தொகையை விட 10,000 கோடி ரூபாய் அதிகமாக ஈவுத்தொகை கிடைத்துஉள்ளது. 4,00,000 கோடி டாலர் சந்தை மதிப்பை ஆப்பிள் நிறுவனம் நெருங்கி வருகிறது. ஐபோன் விற்பனையை அதிகரிக்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் ஆர்வம் காட்டி வருவதால், அமெரிக்க பங்குச்சந்தையில் விரைவில் புதிய வரலாற்றை ஆப்பிள் நிறுவனம் படைக்குமென முதலீட்டாளர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.56,89,452 கோடி ரூபாயாக, மார்ச் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து உள்ளது. ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 1.33 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு வாரத்தில் இதுவே அதிகபட்ச உயர்வாகும். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க ஆர்.பி.ஐ.,யின் தடுப்பு நடவடிக்கைகளால், கையிருப்பு கடந்த சில வாரங்களாக சற்று குறைந்து வந்தது.90,000 கோடி ரூபாய்க்கு, 2022 - -24 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 6,000 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல்.இந்தியா தெரிவித்துள்ளது. வீடு, வணிக கட்டடங்களுக்கு தேவை வலுவாக இருப்பதால் அதிகபட்சமாக 2024ல், 39,742 கோடிக்கு 2,335 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை