உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

13சர்வதேச நாடுகளை அடையாளம் கண்டு, நாட்டில் உள்ள உருக்கு ஆலைகளை நவீனமயமாக்கும் நோக்கில், மேம்பட்ட முறையில் உருக்கு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ள இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 13,482 கோடி ரூபாய்க்கு ஜப்பானின் எஸ்.எம்.பி.சி., நிறுவனம், 'எஸ்' பேங்கின் 20 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது, இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு. எஸ் பேங்கில் உள்ள எஸ்.பி.ஐ.,யின் 13.19 சதவீத பங்குகளையும், பிற பங்குதாரர்களிடம் இருந்து 6.81 சதவீத பங்குகளையும் வாங்கஉள்ளது.14,167 கோடி ரூபாய்க்கு அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் இம்மாதத்தில் இதுவரை முதலீடு செய்துள்ளனர். கடந்த ஏப்ரலில் செய்த 4,223 கோடி ரூபாய் முதலீட்டைத் தொடர்ந்து, இம்மாதத்திலும் முதலீடு தொடர்கிறது. இதன் காரணமாக நடப்பாண்டில் இதுவரை திரும்ப பெற்ற முதலீடு 98,184 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை