எண்கள் தரும் செய்தி
1,590மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான கல்பதரு, புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,590 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துஉள்ளது. இதற்கான பங்குகள் விற்பனை, வரும் 24 முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், பங்குகள் ஜூலை 1ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன. பங்கு ஒன்றின் விலை, 387 முதல் 414 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.