மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் மீது பிப்., 1 முதல் கூடுதல் கலால் வரி
17 minutes ago
வை - பை காலிங் வசதி பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
38 minutes ago
புதுடில்லி: இந்தியாவில் பிராட்பேண்டு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு நவம்பர் மாத நிலவரப்படி 100 கோடியை தாண்டியுள்ளதாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது. 3ஜி, 4ஜி, 5ஜி மொபைல் டேட்டா வை - பை மற்றும் பைபர் ஆகிய அதிவேக இணைய சேவைகளை பயன்படுத்துபவர்களே, பிராட்பேண்டு சந்தாதாரர்கள் என அழைக்கப்படுகின்றனர். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 99.98 கோடியாக இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை, நவம்பரில் 100.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொபைல் டேட்டா பயனர்களின் மாதாந்திர சராசரி இணைய பயன்பாடு 24 ஜி.பி.,யாக அதிகரித்துள்ளதாகவும், சர்வதேச அளவில் இதுவே மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.81 கோடி கடந்தாண்டு நவம்பர் மாத நிலவரப்படி, தமிழகத்தில் பிராட்பேண்டு சந்தாதாரர்கள் எண்ணிக்கை 7.81 கோடி தேசிய அளவில் ஜியோ ஆதிக்கம் செலுத்தினாலும், தமிழகத்தில் ஏர்டெல் அதிக பயனர்களை கொண்டுள்ளது. நிலவரம் சந்தாதாரர் எண்ணிக்கை (கோடியில்) 2015 நவம்பர் 13.15 2025 நவம்பர் 100.37 வகை சந்தாதாரர் எண்ணிக்கை (கோடியில்) வயர்லெஸ் 95.85 வயர்டு 4.51 வயர்லெஸ்: மொபைல் டேட்டா, வைபை வயர்டு: பைபர் டாப் 5 நிறுவன பயனர் எண்ணிக்கை (கோடியில்) ஜியோ 51.05 ஏர்டெல் 31.43 வோடபோன் 12.78 பி.எஸ்.என்.எல்., 3.39 ஏ.சி.டி., 0.24 காலகட்டம்: நவம்பர் 2025 ஆதாரம்: டிராய்
17 minutes ago
38 minutes ago