உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

ஆர்.ஐ.என்.எல்.,லுக்கு அரசு ரூ.1,650 கோடி நிதி

மத்திய ஸ்டீல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான, 'ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம்' எனப்படும் ஆர்.ஐ.என்.எல்., நிதிநிலையை மேம்படுத்த 1,650 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த செப்டம்பரில் பங்கு மூலதனமாக 500 கோடியும், செயல்பாட்டு மூலதனமாக 1,150 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தின் நிலைத்தன்மை குறித்து, எஸ்.பி.ஐ.,யின் துணை நிறுவனமான 'எஸ்.பி.ஐ., கேப்ஸ்' அறிக்கை தயாரிக்கவுள்ளது. ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்துக்கு மொத்தம் கடன் நிலுவை 35,000 கோடி ரூபாயை தாண்டியுள்ள நிலையில், அதை தொடர்ந்து இயக்கத் தேவையான நடவடிக்கைகளில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

சோலார் அமைப்புக்கு இந்தியா மீண்டும் தலைமை

சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணியின் தலைமைப் பொறுப்புக்கு, இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த கூட்டணியின் ஏழாவது பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டமைப்புக்கு 2026 வரை இந்தியா தலைமை தாங்கவுள்ளதாக தெரிவித்தார். துணை தலைமை பதவிக்கு பிரான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறிய அமைச்சர், சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா அபரிமித வளர்ச்சி கண்டு வருவதை, சர்வதேச அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்வதாக தெரிவித்தார். ஆப்ரிக்க மண்டலத்தில் இருந்து கானா, சீஷெல்ஸ் நாடுகளும் ஆசியா, ஆசிய பசிபிக் மண்டலத்துக்கு ஆஸ்திரேலியா, இலங்கை ஆகியவையும் துணைத் தலைமைக்கு தேர்வானதாகவும் பிரகலாத் ஜோஷி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை