உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

'விண்ட்பால் வரி' நீக்கத்தால் ரிலையன்ஸ் பங்கு விலை உயர்வு

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான, விண்ட்பால் வரியை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை நேற்று அதிகரித்தது. புவிசார் அரசியல் பதற்றம் உள்ளிட்ட வெளிப்புற காரணிகளால், பொருட்களின் விலை திடீரென அதிகரிக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும். இதனை கட்டுப்படுத்தும் வகையில், அரசு இந்நிறுவனங்களுக்கு விதிக்கும் வரியே விண்ட்பால் வரி.ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை தொடர்ந்து, உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதையடுத்து, கடந்த 2022 செப்டம்பர் முதல், இதன் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விண்ட்பால் வரி விதித்தது. இந்த வரியை திரும்பப் பெறுவதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதனால், ரிலையன்ஸ் பங்கு விலை 1.42 சதவீதமும்; ஓ.என்.ஜி.சி., பங்கு விலை 0.37 சதவீதமும் உயர்ந்தன.

தயாரிப்பு துறை வளர்ச்சி11 மாதங்களில் இல்லாத சரிவு

நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த நவம்பரில் 11 மாதங்களில் இல்லாத சரிவை கண்டுள்ளது. வலுவான போட்டி சூழல் மற்றும் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது. அதன் அறிக்கையின்படி, பி.எம்.ஐ., குறியீடு, கடந்த அக்டோபரில் 57.50 புள்ளிகளாக இருந்த நிலையில், நவம்பரில் 56.50 புள்ளிகளாக குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி