சென்னை:செப்டம்பரில் இருசக்கர வாகன விற்பனை, 9 சதவீதம் உயர்ந்தது.
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு, பண்டிகை காலம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள். கடந்த ஆண்டு செப்டம்பரில் 18.93 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் 20.59 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின. இந்த மாதத்தின் முதல் பாதியில் விற்பனை குறைவாக இருந்த நிலையில், நவராத்திரி, ஜி.எஸ்.டி., குறைப்பு அமலான 22ம் தேதியில் இருந்து இருசக்கர வாகன விற்பனை அதிகரித்தது. ஹோண்டா, ஹீரோ நிறுவனங்கள் இடையே முதல் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஹீரோ நிறுவனம் 6.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது. விற்பனை 5 சதவீதம் உயர்ந்துள்ளது. ராயல் என்பீல்டு , 43 சதவீதம் அதிகரித்து, வரலாறு காணாத அளவில், 1.13 லட்சம் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதி, 41 சதவீதம் உயர்ந்து உள்ளது.
பண்டிகை கால விலை தள்ளுபடி, சலுகைகள், ஜி.எஸ்.டி., குறைப்பால் குறைந்துள்ள விலை ஆகியவற்றால், அக்டோபரில் இருசக்கர வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.