உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  90,000 டாலருக்கு கீழே சரிந்த பிட்காய்ன்

 90,000 டாலருக்கு கீழே சரிந்த பிட்காய்ன்

கி ரிப்டோ கரன்சியான பிட்காய்ன், கடந்த ஏழு மாதங்களில் முதல் முறையாக 90,000 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், பிட்காய்ன் விலை, இதுவரை இல்லாத அளவாக 1,26,000 டாலர்கள் என உச்சம் தொட்டது. அதன் பிறகு விலை சரிந்து வருகிறது. அமெரிக்க பெடரல் வங்கி கடன் வட்டி விகிதங்களை குறைப்பதற்கான வாய்ப்பு, 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக கணிக்கப்படும் தகவல்களால், ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மை, முதலீட்டாளர்களிடம் குறைந்துள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை