இந்த வாரம் எப்படி இருக்கும்?
நியுட்ரன்: என்ன டவுனு, வாரக் கடைசியிலதான் வேலையிருக்கும் போலன்னு சொல்லிட்டுப் போனிங்க... ஆனாலும், உங்களால ஒண்ணும் பண்ண முடியல போலிருக்கே! டவுனு: வியாழன், வெள்ளியில எவ்வளவோ முயற்சி பண்ணியும் எதுவும் பலிக்கல. செய்திகள் ரொம்பவுமே அப்புவுக்கு அனுசரணையா இருந்துடுச்சு. அதுவும் வெள்ளிக்கிழமை கடைசியில அப்பு, ஒரு போங்கு ஆட்டம் ஆடினார் பாருங்க அது வேற லெவல். அப்பு: சரி, சரி, அப்படியே கையோட, சப்போர்ட் - ரெசிஸ்டென்ஸ் லெவல்களையும் சொல்லீடுங்க. நியுட்ரன்: வழக்கமா வர்ற அமெரிக்க இந்திய தரவுகள் ஒருபக்கம் இருக்கு... அடுத்து நிப்டி-க்கு 25,560, 25,220 மற்றும் 25,010-ல வாராந்திர சப்போர்ட்டும்; 26,120, 26,350, 26,560-ல வாராந்திர ரெசிஸ்டென்சும் இருக்க வாய்ப்பிருக்கு. 25,770 என்பது திருப்பு முனைக்கான ஒரு லெவலா பார்க்கப்படணும். இதுக்கு கீழே போனா, திரும்ப ஏற்றம் வர்றதுக்கு கொஞ்ச நாள் ஆகலாம். டவுனு: சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் லெவலெல்லாம் ரொம்பவும் தள்ளித்தள்ளி இருக்கே. நியுட்ரன்: எங்களோட பங்களிப்பு அப்பப்போ இல்லேன்னா, இப்படித்தான். அப்பு: இவ்வளவு சிரமம் இருக்கா உங்களுக்கு? எங்களைப் பாருங்க. 26,000 - -26,100-ங்கற தடைய உடைக்க முடியாம போராடுறோம். டவுனு: ம்ஹீம். போராடுராறாம். 25,500-ஐ பார்க்காம, அதை உடைக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லுங்க நியூட்ரன். அப்பு: ஏன் அதை நீங்க நேரா சொல்ல மாட்டீங்களோ! டவுனு: இல்லீங்க. போன வாரக் கடைசியில செய்திகள் பாசிட்டிவ்வா இருந்ததுனால, வேணுமின்னே 26,100-க்கு மேல கொண்டு போயிட்டு, அப்புறம் அமைதியா இருந்தாலும் இருந்துடுவீங்க. நியுட்ரன்: இது திங்கள் கிழமையே கூட நடந்திடும். அப்பு: என்ன நியுட்ரன் நாளெல்லாம் குறிச்சீட்டீங்க. டவுனு: டக்குன்னு 26,100-க்கு மேலே போனா, அதுக்கு மேலே போறதுக்கான வலு உங்ககிட்ட இப்ப கிடையாது. அதனால அதற்கப்புறம் எங்க கை ஓரிருநாள் ஓங்கியிருக்கும். நியுட்ரன்: நீங்கள் சொன்ன இரண்டும் நடந்துச்சுன்னா அதுக்கப்புறம் எனக்கும் ஒரு நாள் சான்ஸ் இருக்கும். டவுனு: நியுட்ரன் முகத்துல எப்படி சந்தோஷம் பொங்குது பாருங்க அப்பு. அப்பு: 'நம்பிக்கையை தளரவிடாத நியுட்ரன், சந்தையை தொடர்ந்து ஆவென்று வேடிக்கை பார்த்தார்' என அசரீரி ஸ்டைலில் சொல்ல, மூவரும் அவரவர் திசையில் கிளம்பினார்கள். 25,770 என்பது திருப்புமுனைக்கான ஒரு லெவலா பார்க்கப்படணும். இதுக்கு கீழே போனா, திரும்ப ஏற்றம் வர்றதுக்கு கொஞ்ச நாள் ஆகலாம்.