ஜியோ பைனான்ஷியல்: ஜியோஜித் பரிந்துரை
'ஜியோ பைனான்ஷியல் சர்வீசஸ்' பங்குகளை வாங்கலாம் என்று தரகு நிறுவனமான 'ஜியோஜித்' பரிந்துரை வழங்கியுள்ளது. முக்கிய அம்சங்கள் * ஜியோ பைனான்ஷியல் நிறுவனம் பரிவர்த்தனைகள், இன்சூரன்ஸ் புரோக்கிங், மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட நிதி சேவைகளை வழங்கி வருகிறது * கடந்த ஜன., - மார்ச் காலாண்டில் இதன் ஒருங்கிணைந்த வருவாய் 96.7 சதவீதம் உயர்ந்து 1,020 கோடி ரூபாயாக உள்ளது * நிகர வட்டி வருமானம் 48.4 சதவீதம் வளர்ந்து 720 கோடி ரூபாயாக உள்ளது. வழங்கிய கடன்களின் வளர்ச்சியும், அதிக வட்டி வருமானமும் இதற்கு முக்கிய காரணிகளாக இருந்துள்ளன *வரிக்கு பிந்தைய லாபம் 13.9 சதவீதம் குறைந்து 272 கோடி ரூபாயாக உள்ளது * இன்சூரன்ஸ் பிரீமியம் 8 சதவீதம் உயர்ந்து 982 கோடி ரூபாயாக உள்ளது * 2025 - 26 நிதியாண்டில் ஜியோ பேமென்ட்ஸ் வங்கியில் டிபாசிட்டுகள் 84.4 சதவீதம் உயர்ந்து, 544 கோடி ரூபாயாக உள்ளன * ஜியோ பிளாக்ராக் ஏ.எம்.சி., நிறுவனத்தில் நிர்வாகத்தில் உள்ள சொத்து மதிப்பு 15,218 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போதைய விலை (03.07.26) ரூ.240 இலக்கு விலை ரூ.273 கணிப்பு: கிட்டத்தட்ட 14% விலை ஏற்றம் நிறுவன விபரங்கள் சந்தை மதிப்பு ரூ.1,57,914 கோடி 52 வார உச்ச விலை ரூ.338 52 வார சரிவு விலை ரூ.223 டிவிடெண்டு வருமானம் 0.20%