உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வட்டியை திருப்பி தரும் கிவி

வட்டியை திருப்பி தரும் கிவி

பி ன்டெக் நிறுவனமான கிவி, பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி அதிக தொகை கொண்ட பொருட்களை வாங்கும் போது, அந்த தொகையை தவணைகளாகப் பிரித்து செலுத்தலாம் என்பதோடு, செலுத்திய வட்டித் தொகையை கேஷ்பேக்காக திரும்பவும் பெறலாம் என அறிவித்துள்ளது. மூன்று மாத கால தவணையை தேர்வு செய்வோருக்கு வட்டியில் 100 சதவீத தொகை கேஷ்பேக்காக திரும்ப வழங்கப்படும். ஆறு மற்றும் ஒன்பது மாத இ.எம்.ஐ., திட்டத்தை தேர்வு செய்வோருக்கு, வட்டியில் 50 சதவீத தொகை திரும்ப வழங்கப்படும். கிவி செயலி வாயிலாக எந்தவொரு நிறுவனத்தின் க்யு.ஆர்., கோடையும் ஸ்கேன் செய்து, 'பே வித் இ.எம்.ஐ.,' ஆப்ஷனை தேர்வு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி