உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் லாட் அளவு குறைப்பு

 எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் லாட் அளவு குறைப்பு

தேசிய பங்கு சந்தையில் வர்த்தகமாகும் முக்கிய குறியீடுகளின் பியுச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் பிரிவில் 'லாட்' அளவுகள் இன்று முதல் குறைகிறது. இதனால், ஒரு லாட் வாங்குவதற்கு தேவையான மார்ஜின் தொகை குறையும் என்பதால், சிறு முதலீட்டாளர்களுக்கு இது சாதகமாக இருக்கும் என, தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. சிறிய லாட் அளவுகளால், வர்த்தகர்கள் தங்கள் ரிஸ்க்கை இன்னும் துல்லியமாக திட்டமிட முடியும். குறைந்த விலையில் லாட்கள் கிடைப்பதால், சந்தையில் அதிகப்படியான சிறு முதலீட்டாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஜனவரி அல்லது மார்ச் மாத கான்ட்ராக்ட்களில் பொசிஷன் வைத்திருந்தால், அவை தானாகவே புதிய லாட் அளவுக்கு மாற்றப்படும். எனவே, அவரவர் டிரேடிங் அக்கவுன்டில் உள்ள மார்ஜின் தேவைகளை சரிபார்த்துக் கொள்ளுமாறும் என்.எஸ்.சி., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ