உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / சந்தை துளிகள்

சந்தை துளிகள்

'போன்பே' பங்குகளை விற்கும் 3 நிறுவனங்கள்

ஐ .பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகி வரும், 'போன்பே' நிறுவனத்தின் 10,000 கோடி மதிப்பிலான பங்குகளை, 'வால்மார்ட், டைகர் குளோபல், மைக்ரோசாப்ட் குளோபல் பைனான்ஸ்' ஆகிய நிறுவனங்கள் விற்க திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து போன்பே நிறுவனம், தன் ஆரம்ப கட்ட முதலீட்டாளர்களான வால்மார்ட், 9 சதவீத பங்குகளையும், டைகர் குளோபல், மைக்ரோசாப்ட் குளோபல் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களின் மொத்த பங்குகளையும் விற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரெடிட் கார்டு யு.பி.ஐ.,சேவை 'ஜெட்' நிறுவனத்துக்கு ஒப்புதல்

பி ன்டெக் சேவை வழங்கும் 'ஜெட்' நிறுவனம், ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு, 'யு.பி.ஐ., பேமென்ட்ஸ்' சேவையை துவங்க என்.பி.சி.ஐ., எனும் தேசிய பண பரிவர்த்தனை கழகத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. 'ஆர்.பி.எல்.,'வங்கியுடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெட் யு.பி.ஐ., வாயிலாக, ரூபே கிரெடிட் கார்டை இணைத்து, க்யூ.ஆர்., கோடு வாயிலாக பணம் செலுத்தலாம். இதனால், கேஷ்பேக், முதன்முறை கடன் வாங்குவோரும் நல்ல கிரெடிட் ஸ்கோரை பெறுவர்.

ரூ.19,000 கோடியை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

இ ந்திய பங்குச்சந்தையில் நடப்பாண்டில் இதுவரை, அன்னிய முதலீட்டாளர்கள் 19,015 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று உள்ளனர். அதிகபட்சமாக வங்கிகள், ஐ.டி., நுகர்பொருட்கள் துறை பங்குகளை விற்றுள்ளனர். மாறாக, உலோகத் துறை பங்குகள் குறிப்பிடத்தக்க அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளன. மூன்றாம் காலாண்டு முடிவுகளில் ஏமாற்றம், புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த தாமதம் ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை