| ADDED : நவ 18, 2025 12:41 AM
இ ந்தியாவின் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளதாக, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். வலுவான பொருளாதார அடித்தளமும், அதிகரித்து வரும் குடும்ப முதலீட்டாளர்களின் பங்களிப்பும், இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என அவர் கூறினார். சி.ஐ.ஐ., அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்போது நம் நாட்டில் கிட்டதட்ட 13.50 கோடி தனித்துவமான சந்தை பங்கேற்பாளர்கள் உள்ளனர். இந்திய குடும்பங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களை விட அதிக பங்குகளை வைத்துள்ளன. உலக பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்திய சந்தை வலுவான பொருளாதார அடிப்படை, மக்கள் தொகை அமைப்பு, அதிகரிக்கும் உள்நாட்டு முதலீடுகள் ஆகியவற்றால் நிலைத் தன்மையுடன் இருக்கிறது. அமெரிக்க சந்தையில் ஏற்படும் திருத்தங்கள் உள்ளிட்ட வெளிப்புற அபாயங்கள் இருந்தாலும் கூட, இந்திய சந்தை உறுதியாக செயல்படும். மியூச்சுவல் பண்டுகளில் உருவாகும் லிக்விடிட்டி மற்றும் ரிடம்ப்ஷன் அழுத்தம் போன்ற அபாயங்களை கண்காணிக்க, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, செபி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தா ர். பேருக்கு பங்குச்சந்தை பற்றிய புரிதல் உள்ளது