மேலும் செய்திகள்
90,000 டாலருக்கு கீழே சரிந்த பிட்காய்ன்
9 minutes ago
கேப்பிடல்மைண்டு லிக்விட் பண்டு அறிமுகம்
10 minutes ago
விலை நிலவரம்
23 hour(s) ago
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிபெறும் என்ற நம்பிக்கை மற்றும் எல்.பி.ஜி., இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக, இந்திய ரூபாய் மதிப்பு நேற்று நிலையாக முடிந்தது. ரூபாயின் மதிப்பில் பெரிய ஏற்ற - இறக்கம் காணப்படாத நிலையில், அமெரிக்க பொருளாதார தரவுகளின் வெளியீட்டிற்காக சந்தை காத்திருக்கிறது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகள் ஒன்று சேர்ந்ததால், இந்திய ரூபாய் ஒரே இடத்தில் நீடித்தது. அடுத்த முக்கிய நகர்வுக்கு முன், ஒரு மென்மையான இடைவெளி இருப்பது போல உணரப்பட்டது. அமெரிக்காவில் அரசு முடக்கத்திற்கு பிறகு, பொருளாதார தரவுகள் வெளியாக உள்ளன. இந்த எதிர்பார்ப்பு, சந்தையில் ஒரு தற்காப்பு மனநிலையை உருவாக்கியதால், அமெரிக்க டாலர் சிறிது வலுப்பெற்றது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு, கடந்த வாரம் 67 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 42 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவும் டாலருக்கு ஆதரவாக அமைந்தது. நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 41.68 பில்லியனாக அதிகரித்தது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 9 சதவீதம் சரிந்தது. இச்சூழலில், இந்தியா -- அமெரிக்காவுக்கான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டமும், ஓரளவு நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுவதால் இது, வர்த்தக பதற்றங்களை குறைத்து, நம்பிக்கையை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 22 லட்சம் டன் அளவிற்கு எல்.பி.ஜி., இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது. இது, ஆழமான பொருளாதார உறவுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்பு: ரூபாய் மதிப்பு 88.40 என்ற ஆரம்ப ஆதரவை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 88.40க்கு கீழ் வலுப்பெற்றால், 88.00--87.70 என்ற அளவிற்கு உயர வாய்ப்புள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் பட்சத்தில் 88.80 - -88.90 தடுப்பு நிலையாக இருக்கும்.
9 minutes ago
10 minutes ago
23 hour(s) ago