UPDATED : ஜன 24, 2026 01:47 AM | ADDED : ஜன 24, 2026 01:46 AM
சிறிய ஏற்றத்தில் ஆரம்பித்து, பின் சிறிது சிறிதாக இறங்க ஆரம்பித்து, மதியம் ஒரு மணிக்கு மேல் கணிசமாக இறங்கி, நாளின் இறுதியில் 241 புள்ளிகள் இறக்கத்துடன் நிப்டி நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.இவற்றில் 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 1.12 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.14 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஐடி' குறியீடு குறைந்த பட்சமாக 0.17 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 3.34 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.வர்த்தகம் நடந்த 3,258 பங்குகளில், 879 ஏற்றத்துடனும்; 2,301 இறக்கத்துடனும்; 78 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி, 200 நாள் சாராசரிக்கு கீழே நிறைவடைந்துள்ளது. தினசரி சார்ட் அடிப்படையில், நிப்டி சற்று கீழே செல்வதற்கான 'பியரிஷ் ப்ரேக் அவுட்' என்ற ரீதியில் தான் தற்சமயம் உள்ளது.ஒரு சில டெக்னிக்கல்கள் 'ஓவர்சோல்டு' என்று காட்டுகின்றன என்பதை வைத்து பார்த்தாலுமே, ஏற்றம் வந்தால், 25,150 மற்றும் 25,250-ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸை எதிர்க்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. வருகிற ஏற்றம், ஒரே பாய்ச்சலில் இந்த ரெசிஸ்டென்ஸ்களை தாண்டி மேலே செல்லாவிட்டால், கீழே 24,900 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.