UPDATED : டிச 27, 2025 01:24 AM | ADDED : டிச 27, 2025 01:19 AM
நிப்டி
ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தை சந்தித்த நிப்டி, 3 மணிக்கு மேல் இறக்கத்தில் இருந்து சிறிதளவு மீண்டு, நாளின் இறுதியில் 99 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.08 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோ கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.52 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு, அதிகபட்சமாக 0.59 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் ஐடி & டெலிகாம்' குறியீடு 1.12 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.வர்த்தகம் நடந்த 3,249 பங்குகளில் 1,285 ஏற்றத்துடனும்; 1,867 இறக்கத்துடனும்; 97 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஆரோக்கியமான ஒரு கன்சாலிடேஷன் நடப்பதை போன்ற தோற்றம் டெக்னிக்கலாக தெரியும் போதிலும் அதன் நம்பகத்தன்மை குறைவாகவே இருக்கிறது. 25,800-க்கு மேலே இருக்கும் வரை, பெரிய இறக்கங்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவே. 26,300-ஐ தாண்டினால், 26,500-வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. செய்திகள் மிகவும் சாதகமாக இருந்தால் மட்டுமே இதை எதிர்பார்க்கலாம்.