உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: மீள்வதில் இருந்த வேகம் ஏற்றம் தொடர்வதில் இல்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: மீள்வதில் இருந்த வேகம் ஏற்றம் தொடர்வதில் இல்லை

ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், நாளின் இறுதியில் 150 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி 'ஸ்மால்கேப் 50' அதிகபட்சமாக 1.40 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.62 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம்' அதிகபட்சமாக 1.75 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி கன்ஸ்யுமர் டியுரபிள்ஸ்' குறைந்தபட்சமாக 0.04 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தது.வர்த்தகம் நடந்த 3,214 பங்குகளில் 2,184 ஏற்றத்துடனும்; 938 இறக்கத்துடனும்; 92 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 25,900 என்ற லெவலுக்கு மேலே இருக்கும்வரை பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவே. 25,850-க்கு கீழே சென்றால் 25,600 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கத்தில் இருந்து மீழும் வேகம் அதிகமாக இருக்கும் நிலைமையிலும்கூட வேகமான ஏற்றம் தொடர்வதற்கு, தொடர்ந்து செய்திகள் சாதகமாக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை