இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சியின் உரைகல்
பொறியியல் மற்றும் கட்டுமானத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக, எல் அண்டு டி., உள்ளது. உள்கட்டமைப்பு, மின் நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, ராணுவ தளவாட உற்பத்தி துறைகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஐடி துறை மற்றும் நிதிச் சேவை துறையிலும் செயல்பட்டு வருகிறது.
உள்கட்டமைப்பு துறை
உள்கட்டமைப்பு துறையில், 60 சதவீத ஆர்டர்களை வைத்துள்ளது. திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றுவதில் வலுவாக உள்ளது. ஆனால், உள்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களில், இந்நிறுவனத்துக்கான லாப வரம்பு குறைவாக இருக்கிறது. வீடு, தரவு மையங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் வளர்ச்சி கண்டு வருவதால், அவற்றுக்கான தேவை, சந்தையில் உருவாகி உள்ளது. இது இந்நிறுவனத்துக்கு சாதகமான அம்சமாகும்.
எரிசக்தி துறை
மொத்த ஆர்டர் மதிப்பில் 28 சதவீதம் எரிசக்தி துறை வாயிலாக இந்நிறுவனத்துக்கு வருகிறது. ஹைட்ரோகார்பன் மற்றும் மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்தத் துறையில் மிகப் பெரிய ஒப்பந்தங்களை வைத்துள்ளது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில், ஆன்ஷோர் மற்றும் ஆப்ஷோர் திட்டங்களை கைவசம் வைத்துள்ளது. உள்நாட்டில் புதிய வெப்ப மின் நிலையங்களுக்கான பவர் பாய்லர் -டர்பைன் ஜெனரேட்டர் ஒப்பந்தத்தையும் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல்; புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் இணைப்பு மற்றும் கிளீன் எனர்ஜி ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. ஹைடெக் உற்பத்தி துறை
ஹைடெக் உற்பத்தித்துறை மற்றும் பாதுகாப்பு துறையில் 7 சதவீத ஆர்டர்களை வைத்துள்ளது. செமி கண்டக்டர் டிசைன், எலெக்ட்ரோலைசர் உற்பத்தி மற்றும் அணுசக்தி உபகரணங்கள் ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த துறைகளில் கவனம் செலுத்தி வருவது நிறுவனத்தின் அடிப்படை துறையான இன்ஜினீயரிங் தவிர, புதிய துறைகளிலும் தங்களின் இருப்பை அமைத்துக் கொள்ள உதவும். சர்வதேச வணிகம்
நிறுவனத்தின் மொத்த ஆர்டர்களில் 50 சதவீதம் சர்வதேச சந்தைகளில் இருந்து வருகிறது. இந்த சந்தைகளில் உள்ள பணி மூலதன செலவை சரியாக கையாண்டு வருகிறது. இதன் வாயிலாக வருவாய் விகிதங்களையும், பணப்புழக்கத்தையும் அதிகமாக்கியுள்ளது. இது ஒரு நல்ல நேர்மறை விஷயமாக பார்க்கப்படுகிறது. எதிர்கால வளர்ச்சி
2025--26ம் நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய் 10--15 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகப் பெரிய திட்டங்களை சரியாகச் செயல்படுத்தும் போது, லாப வரம்பும் உயரும். 2021--22ம் நிதியாண்டில், 11 சதவீதமாக இருந்த ஒரு பங்குக்கான வருவாய் விகிதம் 2024--25ம் நிதியாண்டில், 16--17 சதவீதமாக உயர்ந்துள்ளது. 'லக்ஷயா' என்ற திட்டத்தின் வாயிலாக மேலும் ஒரு பங்குக்கான வருவாயை உயர்த்த, நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் கிரீன் ஹைட்ரஜன் மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு துறையிலும் முதலீடு செய்து வருகிறது. பாதக அம்சங்கள்:
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புவிசார் அரசியல் நிச்சயமற்றத் தன்மை கமாடிட்டிகளின் விலையில் ஏற்ற இறக்கம் மிகப் பெரிய திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தாமதம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியிலும் எரிசக்தி துறையின் வளர்ச்சியிலும், எல் அண்டு டி., நிறுவனம் மிகப் பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. அதே சமயத்தில் சவுதி அரேபியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் மிகப் பெரிய திட்டங்களை கையகப்படுத்தியுள்ளது. உள்கட்டமைப்பு, ஹைட்ரோகார்பன்ஸ், செமி கண்டக்டர் டிசைன், எலெக்ட்ரோலைசர், தெர்மல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் முன்னணி நிறுவனமாக மேலும் பலம் பெற வாய்ப்புள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் முன்னணி நிறுவனமாக மேலும் பலம் பெற வாய்ப்புள்ளது.ஷ்யாம் சேகர்,ஐதாட்பிஎம்எஸ் பங்கு ஆய்வு குழு