உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / உங்கள் பணம் உங்கள் உரிமை உரிமை கோராத தொகைக்கான பிரசாரம்

உங்கள் பணம் உங்கள் உரிமை உரிமை கோராத தொகைக்கான பிரசாரம்

உ ரிமை கேட்கப்படாத, நிதிச் சொத்துக்களை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று துவக்கி வைத்தார். டிசம்பர் வரை மூன்று மாதங்கள் இந்த பிரசாரம் நடைபெறவுள்ளது.

குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நிதி சேவை அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, உரிமை கேட்கப்படாத சொத்துக்களை, உரியவரிடம் ஒப்படைப்பதில் பணியாற்றுவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களும் இதுபோன்ற ஒரு பிரசாரம் நடைபெறுவது குறித்து, மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உங்கள் பணம் உங்கள் உரிமை என்ற பெயரிலான, இந்த பிரசாரத்தில் ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ., மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பி.எப்.ஆர்.டி.ஏ., வங்கிகள் ஆகியவை முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளன.  பல்வேறு அமைப்புகளிடம், கேட்பாரற்ற 1.84 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது  கடந்த ஆக., 31, 2025 நிலவரப்படி, இதில் 75,000 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது  உரிமை கேட்கப்படாத 172 லட்சம் பங்குகள், முதலீட்டாளர் பாதுகாப்பு நிதிக்கு மாற்றப்பட்டன  கடந்த ஒரு மாதத்தில் 450 கோடி ரூபாய், உரிமைதாரர்களுக்கு வழங்கப்பட்டது எதில், எவ்வளவு துறை தொகை (ரூ.கோடியில்) வங்கிகள் 97,545 பங்குகள் 20,100 காப்பீடு 20,000 பி.எப்., 8,500 மியூச்சுவல் பண்டு 3,450 டிவிடெண்டு 2,300 *இவை தவிர, அஞ்சலக சேமிப்புகள், கம்பெனி டிபாசிட்டுகள் ஆகியவற்றிலும், உரிமை கோரப்படாத தொகை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை